உண்மையா? திருப்பதி கோவில் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய்

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி கோவில் சிறப்புமிக்கது. அந்த கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுக்கு மிகப்பெரிய ஒரு வரலாறை உண்டு. வருடம் தோறும் பக்தர்கள் கொண்டாட கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த கோவிலாக திருப்பதி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டு முறைகேடு நடந்துள்ளதாக இப்பொழுது ஆந்திரா முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதன்படி லட்டில் மாட்டின் கொழுப்பு, பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய், மற்றும் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை கலக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.இதனை ஒய்.எஸ் காங்கிரஸ் ஏற்க மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

உண்மையா?

thirupati-laddu-animal-fats-in-tamil
thirupati-laddu-animal-fats-in-tamil

அதன்படி நேற்று திருப்பதி லட்டு குறித்து பால்வள மேம்பாட்டு ஆணையம் செய்த ஆய்வில் மாட்டிறைச்சி, பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டுள்ளது உறுதியாகியது. இதைக் குறித்து பக்தர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

நாள்தோறும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. லட்டில் மட்டும் ஆண்டுதோறும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 500 கோடி ரூபாய் வருவாய் இட்டுகிறது.

மேலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் என்பது பக்தர்களிடையே மிகப் பெரிய ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. கிட்டத்தட்ட 1760 ஆண்டு முதல் பிரத்தியேகமாக மிகவும் ஆச்சாரமாக திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பொழுது நடந்த இந்த ஒரு சம்பவத்தின் கீழ் இனிமேல் பக்தர்கள் லட்டு வாங்குவதற்கு தயக்கம் ஏற்படுவார்கள் எனவும் இதனால் தேவஸ்தானத்திற்கு இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read more:புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளை கும்பிட நல்ல நேரம் Puratasi Sani Bow Down Taming

Leave a Comment