BSNL 5G Phone கடந்த சில தினங்களாகவே பிஎஸ்என்எல் பற்றி சில போலியான தகவல்கள் வந்து கொண்டுள்ளது. அதன்படி இப்பொழுது பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்குவதற்காக மும்மூருமாக வேலை செய்து கொண்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உடன் மிகவும் பிரபலமான நிறுவனமான டாடா கைகோர்த்து 4 ஜி மற்றும் 5ஜி சேவைக்கான உபகரணங்களை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வர முன்வந்துள்ளது.
மேலும் எலன் மஸ் மற்றும் டாடாவும் கூடிய விரைவில் இணைய போவதாகவும் இதனால் பிஎஸ்என்எல் தரம் மேலும் உயர்த்தப்படும் எனவும் சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5G சேவையை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவதாக சில செய்திகள் பரவி உள்ளது.
BSNL 5G Phone Fake Or True
அந்த வகையில் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5G சேவையுடன் … 5G ஸ்மார்ட்போனையும் வழங்குவதாகவும் சில செய்திகள் பரவி உள்ளது. அப்படி அந்த ஸ்மார்ட் போன் 7000 பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ஆகவும், இரண்டு 5G சிம் கார்டுகளை பயன்படுத்தலாம் எனவும், மேலும் இந்த ஸ்மார்ட் போனின் கேமரா 200MP எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி என்பது முழுக்க முழுக்க ஒரு போலியான செய்திதான்.
மேலும் இந்த ஸ்மார்ட் போன் பற்றி எந்த விதமான சம்பந்தமும் பிஎஸ்என்எல் எனக்கு கிடையாது எனவும். இதைப் பற்றி whatsapp மூலமாகவும் சில பதவிகள் பரவி உள்ளதாகவும். இந்த ஸ்மார்ட்போனை வாங்க முதலில் புக் செய்ய வேண்டும் எனவும் அதற்கு தனியாக பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சில போலியான நபர்கள் இதை பயன்படுத்துகின்றன. எனவே இதை முற்றிலும் மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிஎஸ்என்எல் தெரிவிக்கிறது
Read More:வானத்தைப்போல சீரியலுக்கு பதிலா புதிய சீரியல் Suntv Mundru mudichi serial