Aadhar Card Update September 14 இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமகனாக இருக்க அவசியமான மற்றும் அங்கீகரமான இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்களுக்கு புதிய அறிவிப்பை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 14 வரை
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆதார் கார்டை புதுப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதமும் பிறகு இப்பொழுது செப்டம்பர் 14ஆம் தேதி வரை உங்களுடைய ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இவை கோடிக்கணக்கான மக்கள் ஆதார் கார்டு இணைப்பு புதுப்பிக்க வேண்டும் என்றால் கால அவகாசம் தேவைப்படும் என்பதாலும் இவை இலவசமாக செப்டம்பர் 14 வரை ஆதார் மையங்களிலும் இ சேவை மையங்களிலும் இலவசமாக அப்டேட் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி தடுக்க
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆதார் கார்டு எண் மற்றும் கைரேகை பயன்படுத்தி வங்கி மோசடிகள். ஆன்லைன் பணவர்த்தனை மோசடிகள் தடுப்பதற்காக மத்திய அரசாங்கம் வரையறுக்கப்பட்டுள்ள அம்சமாக இது பார்க்கப்பட்டுள்ளது.
மொபைல் மூலம் மை ஆதார் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலமாகவும் உங்களுடைய ஆதார் அட்டையை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் எண் செயலிழந்து போயிடுமா?
அதாவது இலவசமாக வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி வரையும் நீங்களே உங்களுடைய ஆதரவினை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசமும் இலவசமாகவும் செய்து கொள்ள முடியும் என்பது தான். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் செய்யக்கூடிய அனைத்து மாற்றங்களுக்கும் ஆதார் மையத்திலிருந்து ரூபாய் 50 வசூலிக்கப்படும் அவ்வளவுதான் தவிர ஆதார் எண்ணை நீங்கள் மாற்ற முடியாமலே போய்விடும் என்பது வதந்தியாகும்.