Aadhar Card Update till December சில நாட்களாகவே ஆதார் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும் இல்லையெனில் ஆதார் கார்டு செயல் இழந்து போகும் என பல வதந்திகள் மக்களிடையே பரவி வந்துள்ளது. அதற்கு காரணம் மத்திய அரசாங்கம் புதிய ஒரு அரசாணியை வெளியிட்டுள்ளது அதன்படி ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை உங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்.
அதாவது ஆதார் கார்டில் உள்ள பெயர்மாற்றமோ அல்லது முகவரி மாற்றமோ அல்லது கைவிரல் மற்றும் கன் ரேகை ஆகியவை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய ஆதார் கார்டை உங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியை தடுக்க
எதற்காக பத்து வருடத்திற்கு ஒருமுறை உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்திருக்க காரணம் என்னவெனில், ஆதார் கார்டு மூலம் வங்கி மோசடி, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடிகள், மற்றும் சிம்கார்டுகளை வாங்கி மோசடி செய்வது போன்ற வேலைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளதற்கு அப்டேட் செய்ய வேண்டும் என்பது வேண்டுகோள்.
செப்டம்பர் 14
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இலவசமாக ஆதார் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஜூலை மாதம் முதல் கடைசி மாதமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மீண்டும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கட்டாயம் அனைவரும் ஆதார் கார்டு அப்டேட்ஸ்செய்ய வேண்டும் எனவும் அரசாணை வெளியிட்டிருந்தது.
இது தொடர்ந்து ஒவ்வொரு ஆதார் மையத்திலும் அதிகப்படியான கூட்டம் நெரிசல் காரணமாக கடைசி நேரத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசாங்கம் மீண்டும் தேதியை ஒத்தி வைத்துள்ளது.
டிசம்பர் 14
டிசம்பர் மாதத்தில் குறிப்பிடப்பட்ட தேதியில் வரை இலவசமாக ஆதார் மையங்களில் உங்கள் ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதாலே அதிகப்படியான கூட்டம் நெரிசில் காரணமாக தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,
ஒருவேளை இலவசம் இல்லை என்றால் நீங்கள் ரூபாய் 50 ரூபாய் கொடுத்து அப்டேட் செய்யும்படி இருக்கும் எனவும் இதற்காக தான் மக்கள் இலவசமாக தங்களுடைய ஆதரட்டை புதுப்பித்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.