Meiyazhagan OTT Relase Date நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி காம்போவில் உருவாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மெய்யழகன் திரைப்படம் கூடிய விரைவில் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனத்தின் மூலமாக இந்த திரைப்படம் உருவாகியது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது இந்த திரைப்படம். ஏற்கனவே விஜய் சேதுபதி வைத்து 96 என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் பிரேம்குமார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்பு கார்த்தியை வைத்து ஒரு கமர்சியல் மூவியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படம் பார்க்க வந்தவர்கள் பலரும் கண்கலங்கி கண்ணீருடன் தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்பதை நாம் பார்த்து இருப்போம். சென்டிமென்டிற்கு குறை இல்லாத திரைப்படமாக அமைந்துள்ளது. நட்பு, காதல், துரோகம், துக்கம் போன்ற அனைத்தும் கலந்த கலவையாக மெய்யழகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.பருத்திவீரன் முதல் மெய்யழகன் வரை முழுக்க முழுக்க கிராமத்து கதையாக நடிகர் கார்த்திக்கு நல்லாவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SBI Job Vacancy 800 பேருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க
Meiyazhagan OTT Relase Date in Tamil
திரைப்படங்களுக்கு திரையரங்கில் எப்படி வரவேற்பு உள்ளதோ! அதே போல தான் OTT தளங்களில் ரிலீஸ் செய்ய திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியே இருந்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான OTT தேதியே அறிவித்துள்ளனர் படக் குழுவினர்.
வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி அமேசான் பிரைம் இந்த திரைப்படம் வெளியிடப்படலாம் எனவும் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்புவுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read More:பரிதாபங்கள் youtube சேனல் மீது பாஜக புகார்… இவங்க விட மாட்டாங்க போல