மாதம் கொடுத்தால் 1000 ரூபாய், 9 லட்ச ரூபாய் கிடைக்கும் NPS Scheme

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் மட்டும் அல்லாமல் அரசாங்கம் குழந்தைகளை எதிர்காலத்தை காக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் இப்பொழுது புதியதாக என் பி எஸ் வாத்சல்யா (NPS Vatsalya Scheme) திட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டம் செப்டம்பர் 18 ஆம் தேதி நாட்டின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராம் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் சிறுவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் வகையிலும், அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றம், படிப்பு, தொழில், திருமணம் போன்றவற்றிற்காக பயன்படும் வகையில் மத்திய அரசு மூலம் கொண்டுவந்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நீண்ட காலமாக பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கும்.

NPS Vatsalya Scheme – என்பிஎஸ் வாத்சல்யா  தகுதிகள் என்ன

nps-vatsalya-scheme-in-tamil
       nps-vatsalya-scheme-in-tamil

இந்த திட்டமானது ஏற்கனவே தற்போதுள்ள தேசிய ஓய்வு திட்டத்தின் விரிவாக்கம் ஆகும். இந்த மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிர்வாகிக்கப்படும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொதுவானது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக குழந்தைகளின் பெற்றோர்கள் ஓய்வூதிய நிதியை சேமிக்க தொடங்கலாம்.

எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும்?

இதைத் திட்டத்தை குறைந்த பட்சம் 18 வயது இருக்கும் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதேபோல் பெற்றோர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து சேமிப்பு கணக்காக வரவு வைத்துக் கொள்ளலாம்.

NPS Vatsalya Scheme திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள்

  • சிறுவர்கள் மட்டும் குழந்தைகளுக்கான பான் கார்டு
  • பிறந்த தேதிக்கான சான்றிதழ்
  • பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஆதார் கார்டு

போன்ற ஆவணங்களின் கீழ் நீங்களும் இந்த திட்டத்தில் இணைந்து குழந்தைகளின் வருங்காலத்தை மேம்படுத்தலாம்.

எங்கு கணக்கை தொடங்கலாம்?

இந்த கணக்கை தொடங்க நினைக்கும் நபர்கள் வங்கிகள், தபால் நிலையங்கள், மற்றும் இ என் பி எஸ் இ இணையதளத்தின் மூலமாகவும் தொடங்க முடியும்.

எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?
nps-vatsalya-scheme-in-tamil
    nps-vatsalya-scheme-in-tamil

குறிப்பாக இந்தத் திட்டத்தின் கணக்கு தொடங்கி மூன்று வருடங்கள் வரை குறைந்தபட்ச ரூபாயாக ஆயிரம் ரூபாய் செலுத்தி வரும் பொழுது. மூன்று வருடங்களுக்கு பிறகு தான் அந்த கணக்கில் இருந்து பணத்தை அதுவும் 25% மட்டும் தான் எடுக்க முடியும்.

18 வயது எட்டியவுடன் வழக்கமான என் பி எஸ் கணக்காக மாற்றினாலும் குறைந்தபட்சம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் அதாவது 20% திரும்ப பெறலாம். மீதமுள்ள 80 சதவீத பணத்தை ஓய்வூதிய தொகுப்பு நிதியாக பயன்படுத்தப்படும்.

இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குறைவாக பணம் வைத்திருந்தால் முழுத் தொகையும் திரும்ப பெற அனுமதி உண்டு. அதே போல் கணக்காய் வைத்திருக்கும் நபர்கள் விபத்து அல்லது இறப்பு ஏற்பட்டால் முழுவதுமாக பாதுகாவலர் அல்லது பெற்றோர்களுக்கு கையில் வந்து சேரும் .

Read More:டாப் லெவல் பிசினஸ் real estate business இது மட்டும் தான்

Leave a Comment