puratasi thaligai புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது கோவிந்தா என்ற சொல்லுக்கு சொந்தக்காரராக இருக்கும் வெங்கடேச பெருமாள் கடவுள் தான் ஞாபகம் வரும். புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவம் இல்லாமல் சைவம் மட்டுமே சாப்பிட்டு வழிபடுபவர்கள் ஏராளம்.
அந்த வகையில் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் வாரம் ஒவ்வொரு சனிக்கிழமையில் புதுவிதமான படையல்கள் செய்து பெருமாளுக்கு படையல் இட்டு கும்பிடுவது வழக்கம்.
புரட்டாசி மாத சனிக்கிழமை என்றாலே, வீட்டை சுத்தம் செய்து சிலர் பழைய பொருட்களை கூட பயன்படுத்தாமல் புரட்டாசி மாதம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சில பொருட்களை வைத்து தான் சமைத்து படையல் இட்டு வெங்கடேச பெருமாளை வணங்குவார்கள். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் என்ன மாதிரியான தளிகை கடவுளுக்கு படைக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக பெண்கள் தான் விரதம் இருப்பார்கள். ஆனால் புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். குறிப்பாக பெண்கள் விரதம் இருப்பது சனிக்கிழமை நாட்களில் நாம் பெருமானை வழங்குவது கன்னி ராசி மற்றும் சூரிய பகவான் ராசியில் சஞ்சரிக்கும் காலம். ஆதலால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் நேத்து காரியங்கள் நடக்கும்.
மேலும் மகாலட்சுமியின் அருளும் நமக்கு சனிக்கிழமை நாட்களில் புரட்டாசி மாதம் விரதம் இருந்து படையல் இட்டு வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
Also Read More:இன்றைய நல்ல நேரம் 21 செப்டம்பர் 2024 Today Nalla Neram in Tamil –
puratasi thaligai புரட்டாசி மாத சனிக்கிழமை படையல்
புரட்டாசி மாதத்தில் தான் அதிகமாக வெங்கடேச பெருமாளை நாம் வணங்குவோம். ஆதலால் அந்த மாதம் முழுவதுமே அவருக்கு சிறப்பான மாதம் தான். உங்கள் வீட்டில் உள்ள வெங்கடேச பெருமாளை உருவப்படத்தை மனப்பலையில் வைத்து அழகாக பூக்கள் நிறைந்து ஜோடிக்க வேண்டும்.
அதில் அதிகமாக துளசி மாலையை இடம்பெறுவது பெருமாளுக்கு பிடிக்கும். மேலும் பெருமாளின் படத்திற்கு அருகையே சிறிய விநாயகர் படத்தையும் வைப்பது சிறந்தது.
- பிறகு மூன்று இலை வைத்து தளிகையை நீங்கள் போட வேண்டும். அதில் குறைந்த பட்சம் ஐந்து வகையான சாதத்தை படைப்பது அவசியமாகும்.
- சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்,, சுண்டல், உளுந்து வடை ஆகியவற்றை படையலில் வைக்க வேண்டும்.
- மேலும் மாவிளக்கு பயன்படுத்தி வழிபடும் நபர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் ஆகும் என்பதும் ஒரு விதமான நம்பிக்கை தான். அதனால் தலிகையின் பொழுது மாவிளக்கு மூலம் வெங்கடேச பெருமாளுக்கு விளக்கு ஏற்றலாம்.
- சில நபர்கள் வெங்கடேச பெருமாளை வாழை இலையிலே 5 வகையான சாதத்தை வைத்து பெருமாளை போன்று உருவ படத்தை உருவாக்கி வழிபடுவதும் ஒரு விதமான சலுகை தான்.
- பெண்கள் மட்டும் தான் விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. வீட்டில் உள்ள அனைவருமே புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து மூன்று படையல்களில் இருக்கும் சாதத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
Also Read More:புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளை கும்பிட நல்ல நேரம் Puratasi Sani Bow Down Taming