பள்ளி மாணவர்களுக்கு குஷி……. தமிழக அரசு பள்ளி கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி காலையில் சிற்றுண்டி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து மேற்படிவுக்காக செல்லும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்க திட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இப்பொழுது மாணவிகளை போல மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் மூலம் ஆயிரம் வழங்கப்படும்.
தமிழ் புதல்வன் திட்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் பெண் பிள்ளைகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று மேல்படிப்பிற்காக செல்லும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் அவருடைய வங்கி கணக்கில் வரவைக்கப்படும். இதை தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
அதேபோல் இவை மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இவையும் மாணவிகளைப் போல மாணவர்களுக்கும் மேற்படிவிற்கு உதவி செய்ய வகையில் ரூபாய் 1000 அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதை வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்க வைக்கிறார். இதை தொடர்ந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read :100 நாள் வேலை திட்டம் மாற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி 100 Naal Velai thittam
தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள்
- தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் ஆறாவது முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் பயின்று இருக்க வேண்டும். மேலும் இவை எந்தவிதமான குடும்ப வருமானம் அடிப்படையில் இந்த திட்டத்தை இணைய வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
- தமிழ் புதல்வன் திட்டத்திற்காகவே வெப்சைட் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- கண்டிப்பாக விண்ணப்பிக்கப்படும் மாணவர்கள் அவர்களுடைய வங்கி கணக்கு அல்லது பெற்றோர்களுடன் சேர்ந்து ஜாயிண்ட் அக்கௌன்ட் வங்கி கணக்க வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
- மேலும் அரசு பள்ளிகளில் மற்றும் பயின்று மேற்படிப்புக்காக செல்லு மாணவர்களுக்கு இவை பொருந்தும். என்பது குறிப்பிடத்தக்கது